ஹாலிவுட்டில் மிகவும் பிரபலாமான திரைப்படத்தில் ஒன்று, ‘இண்டியானா ஜோன்ஸ்’. தொடர்ந்து நான்கு பாகங்களாக வெளியான இப்படத்தில் கதாநாயகனாக ஹாரிசன் ஃபோர்டு நடித்து அசத்தி இருந்தார்.
இதையடுத்து ஐந்தாவது பாகம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் அதில் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ‘இண்டியானா ஜோன்ஸ்’ ஐந்தாவது பாகத்திலும் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜார்ஜ் லூகாஸ் இயக்கும் இப்படத்தை லூகாஸ் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2022 ஜூலையில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு ஹாரிசன் ஃபோர்டு ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘ஈஸ்வரன்’ பட அப்டேட்டை வெளியிட்டார் சிம்பு!