ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகக் களமிறங்கிய ஹர்பஜன், தமிழில் ட்வீட் செய்வது, தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது வழக்கம். தற்போது தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார்.
முன்னதாக, சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள ஹர்பஜன், ‘அக்னி தேவி’ படத்தை இயக்கிய ஜேபிஆர் - சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரமாக நடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்தப் படத்தை பி. ஸ்டாலின், ஜேபிஆர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, ஆக்ஷன் கிங் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
-
ஒருத்தர சிரிக்க வைக்கறது மிக பெரிய விஷயம் அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம் பிடிச்சு அசத்துறீங்க.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ @actorsathish. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நினைய காத்திருக்கிறேன் pic.twitter.com/gqZ8KCi6EB
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஒருத்தர சிரிக்க வைக்கறது மிக பெரிய விஷயம் அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம் பிடிச்சு அசத்துறீங்க.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ @actorsathish. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நினைய காத்திருக்கிறேன் pic.twitter.com/gqZ8KCi6EB
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 23, 2020ஒருத்தர சிரிக்க வைக்கறது மிக பெரிய விஷயம் அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம் பிடிச்சு அசத்துறீங்க.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ @actorsathish. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள் #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நினைய காத்திருக்கிறேன் pic.twitter.com/gqZ8KCi6EB
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 23, 2020
சதீஷ் இன்று (மே 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒருத்தர சிரிக்க வைக்கறது மிகப்பெரிய விஷயம். அத ரொம்ப சுலபமா செஞ்சு மக்கள் மனசுல சிரிப்பு நாயகனா இடம்பிடிச்சு அசத்துறீங்க. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்பு சகோ சதீஷ். நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள். #Friendship படத்தில் உங்கள் சிரிப்பு மழையில் நனையக் காத்திருக்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.