சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லோஸ்லியா நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரண்ட்ஷிப் என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் இயக்குகிறார்கள்.
ஆக்ஷன் கிங் அர்ஜூன், ஹர்பஜன் சிங், லோஸ்லியா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஹர்பஜன் சிங் பிரண்ஷிப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்து, இடியும், மின்னலும் ஆர்பரிக்க இதோ #சூப்பர்ஸ்டார் #தல #தளபதி #உலகநாயகன் கோட்டையில் நம்ம #FriendShipFirstLook #FriendShipMotionPoster என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படத்தின் மோஷன் போஸ்டருக்கான வீடியோ லிங்கையும் இணைத்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் விளையாட தொடங்கியது முதல் தொடர்ந்து தனது ட்விட்டரில் வித்தியாசமான தமிழ் ட்வீட் பதிவுகளோடு தமிழ்நாடு மக்களை கவர்ந்தார் ஹர்பஜன் சிங். தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், சம்பவங்கள் பற்றி தனது கருத்துகளை தவறாமல் பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதையடுத்து சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட்டான இவர் தற்போது அர்ஜூனுடன் இணைந்து பிரண்ஷிப் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அத்துடன் தனது தமிழ் ட்வீட்களையும் தவறாமல் பதிவிட்டு ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்தி வருகிறார்.