’எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிப்பில் ஜமீல் இயக்கும் புதிய படம் 'மஹா'. நடிகையின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா நடித்துவருகிறார்.
திரில்லர் பாணியல் தயாராகிவரும் இப்படம், ஹன்சிகாவின் 50ஆவது படமாகும். இப்படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரானுக்கு இது 25ஆவது படமாகும்.
மஹா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என வெளியான போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்நிலையில், ஹன்சிகா யூ-ட்யூப் சேனல் ஒன்றைப் புதிதாகத் தொடங்கி அதில் தனது திறமைகளை வெளிப்படுத்திவருகிறார். கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான பொழுதை நடிகர், நடிகைகள் தங்களது வீடுகளில் கழித்துவரும் நிலையில், வீட்டிலிருக்கும் ஹன்சிகா தனது திறமைகள், போட்டோஷூட், பிட்னஸ், சமையல், குறும்படங்கள் போன்றவற்றை இதில் பதிவிட்டுவருகிறார். இதன்மூலம் ரசிகர்களுடன் மேலும் நெருங்கிப் பழக முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹன்சிகாவின் இந்தச் சேனல் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில் நடிகர் ராணாவும் யூ-ட்யூப் சேனல் ஒன்றைத் தொடங்கி திரைப் பிரபலங்களிடம் நேர்காணல் மேற்கொள்ளும் காணொலிகளைத் தொடர்ந்து பதிவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.