குக்கூ, ஜோக்கர் ஆகிய இரண்டு சமூகம் சார்ந்த படங்களை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் மார்ச் 6ஆம் தேதி 'ஜிப்ஸி' படம் வெளியானது. இது ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும், நிகழ்கால அரசியலை துணிச்சலுடன் பேசியதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜிப்ஸி படத்தைப் பார்த்த மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அத்தனை பிரிவினைகளையும் அடித்துநொறுக்கும் ஆயுதம் மனிதம் மட்டுமே என்ற இன்றைய காலத்துக்கு தேவையான கருத்தை வலியுறுத்தும் திரைப்படம் ஜிப்ஸி. படக்குழுவினர் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்'' என இயக்குநர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் அம்பேத்குமார், நடிகர் ஜீவா ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதேபோல் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் திரைப்படத்தை பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புகள் வழங்குக - கமல்ஹாசன்