ETV Bharat / sitara

ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பாக மாறிய டிக் டாக் பிரபலத்தின் பஞ்ச் வார்த்தை - வணக்கம்டா மாப்ள

'வணக்கம்டா மாப்ள' என்ற பஞ்ச் வார்த்தையுடன் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக் டாக் அருண். இவரது இந்த வார்த்தை ஜிவி பிரகாஷ் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

gv prakash new movie
ஜிவி பிரகாஷ் நடிக்கும் வணக்கம்டா மாப்ள
author img

By

Published : Feb 22, 2021, 9:30 PM IST

சென்னை: இயக்குநர் எம். ராஜேஷ் - ஜி.வி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு 'வணக்கம்டா மாப்ள' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜேஷ் - ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். தனது முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி பாணியில் இந்தப் படத்துக்கு வணக்கம்டா மாப்ள என வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.

படத்தின் தலைப்பான டிக் டாக் பிரபலத்தின் பஞ்ச்

தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் டிக் டாக் செயலியில் 'வணக்கம்டா மாப்ள' என்று பேச்சை தொடங்குவதற்கு முன் கூறி பிரபலமானவர் தேனியைச் சேர்ந்த அருண். முறுக்கு மீசை, நெற்றியில் நீளமான அளவில் திருநீறு பூசிக்கொண்டு கெத்தாக அவர் சொல்லும் 'வணக்கம்டா மாப்ள' சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானது. அத்துடன் அவரது பேச்சும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளையும் அள்ளியது.

இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த சொல்லை தற்போது படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர்.

gv prakash new movie
ஜிவி பிரகாஷ் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் வணக்கம்டா மாப்ள டைட்டில் லுக்

இந்தப் படத்தில் கதாநாயகியாக 'பிகில்' படத்தில் தென்றலாக கலக்கிய அம்ரிதா ஐயர் நடிக்கிறார். 'பிக் பாஸ்' புகழ் டேனியல், ஆனந்தராஜ், 'பிக் பாஸ்' ரேஷ்மா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று (பிப். 22) மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் தலைப்பை முன்னரே தெரிவித்தனர். இதையடுத்து அந்த தலைப்பு ரசிகர்களை கவர்ந்து அதிகமாக பகிரப்பட்டது. பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.

gv prakash new movie
ஜிவி பிரகாஷ், அம்ரிதா ஐயர் நடிக்கும் வணக்கம்டா மாப்ள ஃபர்ஸ்ட் லுக்

டிவியில் நேரடியாக ரிலீஸாகும் வணக்கம்டா மாப்ள

சன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் சன் டிவியில் நேரடியாக பிரிமியர் செய்யப்படவுள்ளது.

நேரடி டிவி ரிலீஸுக்கு எகிறும் எதிர்பார்ப்புகள்

தற்போது திரைப்படங்களை நேரடியாக டிவியில் பிரிமியர் காட்சியாக வெளியிடும் பாணி தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே எடுத்து நீண்ட நாள்களாக ரிலீஸ் செய்யப்படாத படங்களை டிவியிலேயே நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் கோலிவுட்டில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: வி.ஜே. சித்ராவின் 'காலங்கள் கரைகிறதே'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.