நடிகராக, இசையமைப்பாளராக, பாடகராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தனது இசையின் மூலமாக சர்வதேச அளவில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். 'கோல்ட் நைட்ஸ்' என்ற இசை ஆல்பத்தின் மூலம் உலக இசைக் கலைஞர்கள் மத்தியில் கால்பதித்து தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தில், 'ஹை அண்ட் ட்ரை' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.
ஜிவி பிரகாஷ், கனடாவைச் சேர்ந்த ஜூலியா கர்தா இருவரின் கூட்டு முயற்சியில் இரண்டு விதமான உலகத்தின் கலவை இந்தப் பாடல். 'ஹை அண்ட் ட்ரை', ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கிலத் தனிப்பாடல். ஜிவி - ஜூலியா இருவரும் இணைந்து இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகளை ஜூலியா எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கான ப்ரோக்ராமிங், அரேஞ்மென்ட் இரண்டையும் ஜிவி செய்துள்ளார்.
இந்தப் பாடல் ஜிவி பிரகாஷின் சொந்த ஸ்டூடியோவில், யெஹோவாசன் அல்காரால் மிக்சிங் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர் ராண்டி மெரில் பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இவர் அடெல், டெய்லர் ஸ்விஃப்ட், கேடி பெர்ரி, மரூன் 5 உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார்.
ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கில சோலோ பாடல் விரைவில் வெளியீடு! - ஜிவி பிரகாஷின் படங்கள்
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதல் ஆங்கில தனி பாடலான 'ஹை அண்ட் ட்ரை' விரைவில் வெளியாக உள்ளது.