ETV Bharat / sitara

ஆசியா அகாதெமி கிரியேட்டிவ் விருதுகளை வென்ற கல்லி பாய் திரைப்படம், டெல்லி க்ரைம் இணையத்தொடர்! - கல்லி பாய் திரைப்படம் டெல்லி க்ரைம் இணையத்தொடர்

ஆசிய அகாதெமி கிரியேட்டிவ் விருதுகளின் பிராந்தியப் படங்களுக்கான பிரிவில் இந்தியாவிலிருந்து வந்த சிறந்த படமாக கல்லி பாய் திரைப்படமும் நெட்ஃப்ளிக்ஸ் தொடரான டெல்லி க்ரைமும் விருதுகள் பெற்றுள்ளன.

Gully boy, Delhi Crime bagged awards
author img

By

Published : Oct 18, 2019, 11:54 PM IST

ரன்வீர் சிங், அலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம் ஏற்கனவே 92ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கு இந்தியாவின் சார்பாக அனுப்பப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய அகாதெமி கிரியேட்டிவ் விருதுகளில் இந்தியாவின் சிறந்த திரைப்படமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தன் சகோதரி ஜோயா அக்தர் இயக்கிய இந்தத் திரைப்படம், பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுவருவது குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து, படக்குழுவினரை இயக்குநரும் நடிகருமான ஃபரான் அக்தர் பாராட்டியுள்ளார்.

மும்பை வீதிகளில் வெகு இயல்பாக இயங்கும் ராப்பர்களை உத்வேகமாகக் கொண்டும் இந்திய ராப் கலாசாரத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்த இந்தப் படத்தில், ரன்வீர் சிங்கும் சித்தாந்த் சௌத்ரியும் மும்பை குடிசைப்பகுதிகளில் இயங்கும் ராப்பர்களாக போட்டிப் போட்டு நடித்திருந்தனர்.

இதுதவிர நெட்ஃப்ளிக்ஸின் டெல்லி க்ரைம் இணையத் தொடருக்காக நடிகை ஷெஃபாலி ஷா சிறந்த முன்னணி கதாபாத்திரத்திற்கான விருதும் ரிச்சீ மேத்தா சிறந்த இயக்குநர், திரைக்கதைக்கான விருதுகளையும் பெவெரலி மில்ஸ் சிறந்த எடிட்டிங்கிற்கான விருதுகளையும் பெற்றுள்ளனர்.

கூட்டுப் பாலியல் வல்லுறவையும் அதன் தொடர்ச்சியாக காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளையும் பற்றிய இந்த இணையத் தொடருக்காக விருதுகள் வென்றவர்களின் பட்டியலை ட்விட்டரில் பகிர்ந்து நடிகை ஷெஃபாலி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

சிவாஜியின் கலை வாரிசுக்கு, அன்பு வாரிசு கொடுத்த பரிசு!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/gully-boy-delhi-crime-win-big-at-asian-academy-creative-awards/na20191018073304390

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.