சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் காவல்துறை உங்கள் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டு தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசியதாவது:
தயாரிப்பாளர் சங்கம் அனாதையானதே சினிமாவில் இப்போதுள்ள பிரச்னைகளுக்குக் காரணம். நல்லபடியாக இன்று நீதியரசர் ஜெயச்சந்திரன் பொறுப்பேற்று, கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. திரையரங்கங்கள் இல்லையென்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும்.
ஜிஎஸ்டி, உள்ளாட்சி வரியைத் தொடர்ந்து, தற்போது டிடிஎஸ் வரியும் கட்டச்சொல்கிறார்கள். இது திரைத்துறையினருக்கு நல்லதல்ல. இந்த வரி விதிப்பால் ஏற்பட்ட பிரச்னைகள் தொடர்பாக டெல்லி சென்று மனு அளிக்கப்பட உள்ளது. அரசு இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மார்ச் 27ஆம் தேதியிலிருந்து புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்ற விநியோகஸ்தர்களின் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: வரிகளை ரத்து செய்யும் வரை திரைப்பட விநியோகம் நிறுத்தம் - டிஆர் தகவல்!