சென்னை: நீண்ட நாள்கள் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகளுக்கு பின்பு தற்போது திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, ’கட்டில்’ திரைப்பட நூலை வழங்கி இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு வாழ்த்து பெற்றுள்ளார்.
பல திரைப்பிரபலங்கள் பங்களிப்பில் உருவான ’கட்டில்’
இதுகுறித்து அவர் பேசுகையில், “கரோனா இரண்டாம் அலைக்குப்பிறகு 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்கு இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் 'கட்டில்' திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் பொருட்டு உயர்பெருமக்கள் பலரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறேன். அதன்படி தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
லெனின், வைரமுத்து, ஶ்ரீகாந்த்தேவா, மதன் கார்க்கி, சித்ஶ்ரீராம், சிருஷ்டி டாங்கே, இந்திரா சௌந்திரராஜன், கீதா கைலாசம், மெட்டிஒலி சாந்தி, மாஸ்டர் நிதீஷ் ஆகிய பிரபலங்களின் பங்களிப்போடு களமிறங்கும் ’கட்டில்’ திரைப்பட ஆடியோ ரிலீஸ் விரைவில் நடைபெற உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: காதலியைக் கரம்பிடிக்கும் துப்பாக்கி வில்லன்