அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் 'பிகில்'. விஜய் தந்தை-மகனாக இரட்டை வேடங்களில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விஜய் 'கைதி' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 64' என பெயர் வைத்துள்ளனர்.
சமீபத்தில் தொடங்கிய 'தளபதி 64' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அதில் விஜய் கலந்துகொண்டார். இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இதிலும் விஜய் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இப்படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளி ரம்யாவும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதில் மாளவிகா மோகன், விஜய்சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
-
It’s official.
— Gouri G Kishan (@Gourayy) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
To everyone who has been asking me if it’s true, yessssss.
I am more than excited to be a part of @Dir_Lokesh ‘s next #Thalapathy64 alongside the stellar cast🤩
Need your blessings and prayers! https://t.co/EuICTGFLiY
">It’s official.
— Gouri G Kishan (@Gourayy) November 10, 2019
To everyone who has been asking me if it’s true, yessssss.
I am more than excited to be a part of @Dir_Lokesh ‘s next #Thalapathy64 alongside the stellar cast🤩
Need your blessings and prayers! https://t.co/EuICTGFLiYIt’s official.
— Gouri G Kishan (@Gourayy) November 10, 2019
To everyone who has been asking me if it’s true, yessssss.
I am more than excited to be a part of @Dir_Lokesh ‘s next #Thalapathy64 alongside the stellar cast🤩
Need your blessings and prayers! https://t.co/EuICTGFLiY
இதனையடுத்து இப்படத்தில் '96' திரைப்படத்தில் இளம் ஜானுவாக நடித்துப் பெயர்பெற்ற கெளரி கிஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது 'தளபதி 64' படத்தில் தான் நடிக்க உள்ளதை கெளரி கிஷனே, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.