தமிழ் சினிமா கண்ட தனித்துவமான இயக்குநர்களில் செல்வராகவனும் ஒருவர். பிரமிக்கவைக்கும் கதை முதல் சர்ச்சைக்குரிய கதை என அவர் கை வைக்காத டாபிக்கே இல்லை. நடிகர்களைத் தாண்டி செல்வராகவன் படம் என்பதற்காகவே திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் ஏராளம்.
கடைசியாக அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘என்ஜிகே’ திரைப்படம் வெளியானது. தற்போது அவர் அடுத்த பட ஸ்கிரிப்டின் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
-
Giving final touches to my script 🤓🤓🤓😀 pic.twitter.com/gQs1THCRsa
— selvaraghavan (@selvaraghavan) February 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Giving final touches to my script 🤓🤓🤓😀 pic.twitter.com/gQs1THCRsa
— selvaraghavan (@selvaraghavan) February 27, 2020Giving final touches to my script 🤓🤓🤓😀 pic.twitter.com/gQs1THCRsa
— selvaraghavan (@selvaraghavan) February 27, 2020
செல்வராகவனின் புதிய திரைப்படம் ‘புதுப்பேட்டை 2’ , ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். ஆனால் செல்வராகவன் படம் குறித்த எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இன்னும் வெளியாகாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.