‘பிகில்’ படம் வெளியாவதை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு காயத்ரி ரகுராம் வேண்டுகோள் விடுத்து ட்வீட் செய்துள்ளார்.
விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து நாளை வெளியாகவிருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
-
To #Bigil #vijaysir fans please do not harm yourself. I’m also biggest fan vijay sir. Show ur love and verithanam by watching this movie how many ever times / Feeding poor and taking care of ur family. Please it’s a request from vijay sir fan. #vijaylove pic.twitter.com/aIJ6MqRiuw
— Gayathri Raguramm (@gayathriraguram) October 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To #Bigil #vijaysir fans please do not harm yourself. I’m also biggest fan vijay sir. Show ur love and verithanam by watching this movie how many ever times / Feeding poor and taking care of ur family. Please it’s a request from vijay sir fan. #vijaylove pic.twitter.com/aIJ6MqRiuw
— Gayathri Raguramm (@gayathriraguram) October 23, 2019To #Bigil #vijaysir fans please do not harm yourself. I’m also biggest fan vijay sir. Show ur love and verithanam by watching this movie how many ever times / Feeding poor and taking care of ur family. Please it’s a request from vijay sir fan. #vijaylove pic.twitter.com/aIJ6MqRiuw
— Gayathri Raguramm (@gayathriraguram) October 23, 2019
தீபாவளி விருந்தாக இப்படம் நாளை வெளியாகிறது. இதற்காக ரசிகர்கள் ஆர்வாமுடன் பல நற்பணிகளை தமிழ்நாடு முழுவதும் செய்துவருகின்றனர். தற்போது நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ‘நானும் விஜய்க்கு பெரிய ரசிகை தான். விஜய் ரசிகர்கள் தயவு செய்து உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் அன்பை காட்ட வேண்டும் என்றால் படத்தை எத்தனை முறை வேண்டுமானலும் பாருங்கள் இப்படி செய்யாதீர்கள்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.