இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ் மேனன் தற்பொழுது நடிப்புத் துறையிலும் கால் பதித்துள்ளார். அவர் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று இணையத் தொடரில் கௌரவ வேடத்தில் இயக்குநராக நடிக்க உள்ளார்.
ஜெயலலிதாவின் முதல் படமான 'வெண்ணிற ஆடை' படத்தின் இயக்குநர் ஸ்ரீதரின் வேடத்தில் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளார்.
இந்த கெளரவ வேடத்தில் நடிப்புது குறித்து இயக்குநர் கெளதம் மேனன் கூறுகையில், 'உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களில்கூட நீங்கள் பெரிய அளவில் சாதிக்கலாம். நீஙகள் மகத்தான வாழ்க்கையைத் தேர்வு செய்கிறீர்களா அல்லது சந்தோஷமான வாழ்க்கையத் தேர்ந்தெடுக்கிறீர்களா என்பதைப் பொறுத்த விஷயம் இது. சந்தோஷமாக வாழ விரும்பினால் விருப்பமானதை செய்யவும், கேமராவுக்குப் பின்னால் நின்று, ஒருவரது திறமைகளைக் கணித்து வெளிக்கொணரச் செய்வதன் மூலம் அவருக்கு பலத்தையும், நம்பிக்கையையும் கொடுக்க முடியும். இயக்குநர் ஸ்ரீதர் செய்தது இதைத்தான். சக்தி மாற்றமடைந்த இடமும் இதுதான். எனவேதான் ஸ்ரீதரின் பண்புகள், சித்தாந்தங்கள், அணுகுமுறைகள் இதில் இருப்பதாக நான் கருதுகிறேன்' என்றார்.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களை விட்டு விலகுகிறார் இயக்குநர் சுசீந்திரன் - இதான் காரணமாம்