மூன்று வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவரயிருக்கிறது 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம். பல தாமதங்களுக்குப் பின் இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.
படத்தின் வெளியீட்டுப் பணிகள் நிறைவடைந்ததும், அடுத்தப் படமான 'ஜோஸ்வா இமை போல் காக்க' படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் இயக்குநர் கௌதம் மேனன். இந்தப் படத்தினையும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கிறது. படத்தில் 'பப்பி' பட நாயகன் வருண் நடிக்கிறார். ராஹே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் படத்தின் டீஸர் வெளியானது. மேலும் படத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா, இந்தப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் திரைத்துறை பிரபலங்களின் ரீயூனியன்!