ETV Bharat / sitara

தொலைக்காட்சி வரலாற்றின் சிம்ம சொப்பனக் கதாபாத்திரம் டிரியன் லேனிஸ்டர்! - Game of THrones

லாஸ் ஏஞ்சல்ஸ்: Game of Thrones தொடரில் இடம்பெற்ற 'டிரியன் லேனிஸ்டர்’ கதாபாத்திரத்திற்காக, எட்டு முறை எம்மி விருதுகளுக்குத் தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்டு, தன் நான்காவது எம்மியை வென்றுள்ள பீட்டர் டிங்ளேஜிற்கு, உலகம் முழுவதிலுமுள்ள Game of Thrones ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Peter wins emmy for Tyrion
author img

By

Published : Sep 25, 2019, 7:56 PM IST

Updated : Sep 25, 2019, 9:01 PM IST

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருதுகளில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் எம்மி விருதுகள் (Emmy Awards) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருக்கும் Game of Thrones ஆர்வலர்கள் எதிர்ப்பார்த்தது போலவே 2019ஆம் ஆண்டிற்கான Outstanding Drama Series விருதை Game of Thrones தட்டிச்சென்றுள்ளது.

மேலும் பெரும்பான்மை Game of Thrones ரசிகர்களால், மொத்தம் ஒளிபரப்பப்பட்ட 8 சீசன்களிலும் சிறிதும் தொய்வின்றி ரசிக்கப்பட்ட டிரியன் லேனிஸ்டர் கதாபாத்திரத்திற்காக, நடிகர் Peter Dinklage சிறந்த துணை நடிகருக்கான விருதை நான்காம் முறையாக தட்டி சென்றுள்ளது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சீரிஸ் நிறைவடைந்ததன் பிறகும் இத்தனைக் கோடி ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் தள்ளி பிணைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அந்த பாத்திரம் அப்படி என்ன செய்தது?

Peter wins emmy for Tyrion
Tyrion in between war

"எது மனிதர்களைப் பிணைக்கிறது? படைகளா? தங்கமா? இல்லை நாட்டின் கொடிகளா? இவை எதுவுமில்லை. கதைகள்தான். ஒரு சிறந்த கதையைப்போல மக்களைப் ஒன்றிணைக்கக்கூடிய பலம் வாய்ந்த விஷயம் உலகில் இல்லை” டிரியன் லேனிஸ்டர் சொல்லும் பிரபலமான வசனங்களில் ஒன்று இது. இதுபோல் ஒரு தேர்ந்த கதைசொல்லலின் பலனாய், உலகத் தொலைக்காட்சி ரசிகர்களுக்குக் கிடைத்த Game of Thronesஇன் மிக விருப்பமான, அனைவராலும் ரசித்துப் போற்றப்படுகின்ற ஒரு கதாபாத்திரம் தான் இந்த டிரியன் லேனிஸ்டர்.

Peter wins emmy for Tyrion
Tyrion at Westeros

டிரியன் லேனிஸ்டர். கதையின்படி அவர் பிறப்பால் ஒரு அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும், நாம் எதிர்ப்பார்ப்பது போல் "ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெய்ட்டு டா” எனக் கதறி கார் கண்ணாடிகளை உடைத்து, ஆஜானுபாகுவான தோற்றத்துடன் வலம் வரும் வழக்கமான நம்ம ஊர் ஹீரோக்களைப் போன்றவர் அல்ல. குள்ளமான வளர்ச்சி குன்றிய மனிதர், சற்றே விகாரமான தோற்றத்தை உடையவர். பிரசவத்தில் தன் அன்னையை இழந்து பிறந்ததால், தன் சொந்த அப்பாவாலேயே வெறுத்து ஒதுக்கப்படும் பிள்ளை.

இப்படி ஒரு ஹீரோவுக்கான எந்த பொதுவான அடையாளமுமே இல்லாமல், தன் புத்திக்கூர்மையாலும், நகைச்சுவையான பேச்சாலும் முதலில் பெரும் கவனம் ஈர்த்தார். "ஏன் நீ எப்பொழும் புத்தகங்களுடனேயே இருக்கிறாய்?” எனக் கேள்வி எழுப்பப்படும் இடத்தில், "உடல் பலம் பொருந்தியனுக்கு பக்கபலமாய் இருக்கும் கூர்வாளை, பட்டைத் தீட்டப் பயன்படும் சாணைக்கல் போல, எனது பக்கபலமான மூளையைப் பட்டைத் தீட்டப் பயன்படுத்தப்படுபவைதான் புத்தகங்கள்” என டிரியன் பதிலளிக்கும் காட்சி ஏக பிரபலம்.

Peter wins emmy for Tyrion
Tyrion Lannister

Game of Thronesஇல் எந்தக் கதாபாத்திரம் எப்போது கொல்லப்படும் என்று எவராலும் கணிக்க முடியாது. இப்படியான சீரிஸில் உடல் வலிமையில் சிறந்தவனும் நொடிப்பொழுதில் இறந்துபோகும் இடங்களில், தனது மூளையையும் மன வலிமையையும் மட்டுமே பயன்படுத்தி சாவின் விளிம்பிலிருந்து டிரியன் தப்பிவரும் காட்சிகள் ஏராளம்.

"இறப்பு மிகவும் சலிப்பான விஷயம், அதே நேரத்தில் வாழ்க்கை சாத்தியங்களால் நிரம்பியது” என டிரியன் உதிர்க்கும் வசனம் நம் ஊர் தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்டிருந்தால் அப்ளாஸ்களையும், விசில்களையும் வாரி இறைத்திருக்கும். அதே போல் "நீ எவ்வாறு சாக விரும்புகிறாய்?" என பல இடங்களில் கேட்கப்படும் கேள்விக்கு, குறும்பான, சற்றே ஆபாசமான ஒரு பதிலை டிரியன் ஒவ்வொரு முறையும் அளித்தாலும், அந்த பதிலை புன்முறுவலோடு மகிழ்ச்சியாய் கடக்கும் ரசிகர்களே அதிகம். டிரியனின் நகைச்சுவைத் திறனுக்கு இந்தக் காட்சி ஒரு பதம்.

Peter wins emmy for Tyrion
Tyrion as hand of the king

இவ்வளவு மனவலிமையும், புத்திக்கூர்மையையும், நகச்சுவைத்திறனையும் டிரியன் தன் குறைகளுடன் சேர்த்து உபயோகிக்கும்போதுதான் மேலும் அழகாகிறார். தொடரில் கால்களை இழந்த ஒரு சக கதாபாத்திரத்துடன் பேசும்போது தன்னுடன் பொருத்திப் பார்த்து இவ்வாறு அவர் கூறுகிறார், "நீ யார் என்பதை ஒருபோதும் மறக்காதே, ஏனென்றால் உலகம் ஒருபோதும் அதை மறக்காது. உன் குறையை ஒரு கவசம்போல் அணிந்துகொள். அது உன்னை எப்போதும் காயப்படுத்தாது.”

இப்படி வசனங்களால் டிரியன் கதாபாத்திரம் நம்மை இந்த எட்டு சீசன்களிலும், ஒருபக்கம் மெய் சிலிர்க்க வைத்துக்கொண்டே இருந்தாலும், டிரியனின் உணர்ச்சி ததும்பும் இன்னொரு முகம், அபூர்வமாய் திரையில் தோற்றுவிக்கப்படக்கூடிய ஆழமான கதாபாத்திரங்களில் ஒன்று. சுற்றி இருக்கும் பெரும்பான்மை மக்களால் வெறுத்து ஒதுக்கப்படும்போது தனக்கு அன்புகாட்டும் அண்ணன் ஜேய்மியின் மீதான அவன் காதல் வர்ணிக்க இயலாத கவிதை. அதேபோல் தன் ராஜதந்திரத்தால், அத்தனை ஆஜானுபாகுவான மனிதர்கள் இடையே டிரியன் தன் ராஜ்ஜியத்தைக் காப்பாற்றும் இடங்கள் இவனே உண்மைக் கதாநாயகன் என அழுத்தமாய் நிரூபிப்பவை.

Peter wins emmy for Tyrion
Peter Dinklage with Nikolaj Coster-Waldau (Jaimie Lannister)

2011 முதல் ஒளிபரப்பப்படும் இத்தனை வருட Game of Thrones பயணத்தில் அதிக விமர்சனங்களை சந்தித்தது 8 ஆவது சீசன்தான். அதில், டிரியன் தன் சொந்த நகரான வெஸ்டெரோஸில் அமர்ந்து தன் விருப்பப்படி வைன் அருந்தி தன் வழக்கமான நகைச்சுவைப் பேச்சோடு, அரசியல் கலந்தாய்வில் ஈடுபடுவதோடு தொடர் முடிவடைந்ததால்தான், தொடரின் முடிவு ரசிகர்களால் சற்றேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இத்தனை ரசிக்கும்படியான இந்தக் கதாபாத்திரம் மக்களிடையேபோய் சென்று சேர்ந்ததற்கு Game of Thrones இன் இயக்குநர்கள், கதாசிரியர்கள் தாண்டி மிக முக்கியக் காரணமாய் விளங்கியவர் 'பீட்டர் டிங்க்ளேஜ்’. 2011 முதல், கடந்து வந்த எட்டு சீசன்களிலும் ஒரு சீசன் தவறாமல் எம்மிக்காக அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டதும், அதில் நான்கு எம்மிக்களை வென்று குவித்ததுமே பீட்டர் டிங்ளேஜின் நடிப்புத் திறனுக்கு சான்று. டிரியனையும் பீட்டரையும் மக்கள் என்றுமே பிரித்துப்பார்க்க விரும்பவில்லை என்பது ரசிகர்கள் அவருக்கு அளித்த அங்கீகாரத்திற்கான சான்று.

Peter wins emmy for Tyrion
Peter Dinklage wins emmy

உயரத்தில் குள்ளமானவர்களை சர்க்கஸ் காட்சிகளுக்கும், ரசனையற்ற நகைச்சுவைக் காட்சிகளுக்கும் மட்டுமே பெரும்பான்மையாக பயன்படுத்திவந்திருக்கும் தமிழ் சினிமாவிற்கு டிரியனின் கதாபாத்திரமும், பீட்டர் டிங்ளேஜும் ஒரு பெரும் படிப்பினை.

காலங்கள் பல கடந்தும் உலகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றில் டிரியனின் கதாபாத்திரம் ஒரு சிம்ம சொப்பனமாய் நிலைத்து நிற்கும். டிரியனாய் வாழ்ந்து ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் பீட்டர் டிங்ளேஜ் எனும் கலைஞன் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காகப் போற்றிக் கொண்டாடப்படுவார்.

Intro:Body:

Emmy award for Game of thrones 

Conclusion:
Last Updated : Sep 25, 2019, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.