சுஜனா ராவ் இயக்கத்தில் ஸ்ரேயா சரண் நடிக்கும் படம் 'கமனம்'. இளையராஜா இசையில் பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனத்தில் உருவாகும் இந்தப் படம் நிஜ வாழ்வின் யதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக இருக்கும்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது.
பாடகி ‘ஷைலாபுத்ரி தேவி’ என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர் ஷர்வானந்த் வெளியிட்டார்.
தெய்வீகம் நிறைந்த, அழகான பெண்ணாக அந்தப் போஸ்டரில் நடிகை நித்யா மேனன் இடம்பெற்றுள்ளார்.
படத்தின் முழுப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.