உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
மேலும் சினிமா நட்சத்திரங்களும் கரோனாவின் பிடியில் இருந்து தப்பவில்லை. அந்த வகையில் ’ஃப்ரோசன் 2’ படத்தில் ஹனிமரன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்த ரேச்சல் மேத்யூஸ் தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு கரோனா வைரஸ் இருப்பது போல் அறிகுறி தோன்றியது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன்.
![’ஃப்ரோசன் 2’ டப்பிங் ஆர்டிஸ்ட் ரேச்சல் மேத்யூஸ்'க்கு கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6468395_rachel.jpg)
பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் ஒரு வாரம் தனிமைப் படுத்தப்பட்டிருந்தேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், ரீட்டா வில்சன் ஆகியோரும் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆஸ்துமா சிக்கல்களை அதிகரிக்கலாம் - கரோனா பாதிப்புக்குள்ளான ஹாலிவுட் நடிகர் கவலை