மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று (ஜூன் 25) மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்புத் தெரிவித்த அம்மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம், இன்று (ஜூன் 25) 4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 4 பேர் கரோனாவால் மதுரை மாவட்டத்தில் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.