பாலிவுட்டில் 2007ஆம் ஆண்டில் ஃபரா கான் குந்தர் இயக்கத்தில் ஷாரூக்கானின் நடிப்பில் வெளியான 'ஓம் சாந்தி ஓம்' படம் மூலம் திரையில் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோனே. இதனையடுத்து இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'சபாக்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் தீபிகா படுகோனே அடுத்த ஆண்டு (2021) தான் மிகவும் பிஸியாக இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரபல நாளிதழுக்குப் பேட்டியளிக்கையில், “2021ஆம் ஆண்டு தொடக்கம் முதல் எனது படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன. முதலில் நாக் அஸ்வினின் புதிய பட படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளேன்.
இப்போது இயக்குநர் ஷாகுன் பாத்ரா இயக்கும் படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். தீபிகா படுகோனே கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.