மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின், பாந்த்ரா காவல் நிலையத்தில் (Bandra police station) நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "எஸ்.எஃப்.எல். ஃபிட்னஸ் (SFL Fitness) நிறுவன இயக்குநர் காசிப்கான், ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா ஆகியோர் 2014ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தில் ஒரு கோடியே 51 லட்சம் ரூபாய் முதலீடு செய்யுமாறு கேட்டனர். அவர்கள் எஸ்.எஃப்.எல். ஃபிட்னஸ் நிறுவனம் சார்பாக எனக்கு ஸ்பா, உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை நடத்துவதற்கான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, ஏமாற்றிவிட்டனர்.
பணத்தைக் கேட்டால் கொடுக்காமல் மிரட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாந்த்ரா காவல் துறையினர் சிப்கான், ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- — SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) November 14, 2021
">— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) November 14, 2021
இந்நிலையில் இது குறித்து ஷில்பா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜ்குந்த்ரா, என் பெயர் மீது பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆருடன் காலைப்பொழுது விடிந்தது. எஸ்.எஃப்.எல். (SFL) ஃபிட்னஸ் நிறுவனத்தை காசிப்கான் நடத்துகிறார்.
இந்த நிறுவனம் தொடர்பாக செய்யப்படும் அனைத்து ஒப்பந்தங்களும் அவரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவருடைய பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. புகார் கொடுத்தவரிடமிருந்து ஒரு ரூபாய்கூட நாங்கள் பெறவில்லை.
எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செயலைச் செய்கின்றனர். கடந்த 28 ஆண்டுகளாக நான் மிகவும் கடினமாக உழைத்தேன். எனது நற்பெயரை வேண்டும் என்றே கெடுப்பது வேதனையாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Jai Bhim: 'ஜெய் பீம்' சூர்யாவுக்கு ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்கள்