ETV Bharat / sitara

‘ஆங்கிலேயர் ஆட்சியில்தான் அனைவருக்கும் கல்வி கிடைத்தது’ - பா.ரஞ்சித் - reservation

திருச்சி: இந்த மண்ணை பலர் ஆட்சி செய்திருந்தாலும் ஆங்கிலேயர்கள் தான் முதன் முதலில் அனைவருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்தார்கள் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

pa.ranjith
author img

By

Published : Aug 25, 2019, 4:11 AM IST

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

கல்வி உரிமை மாநாட்டில் ரோகிணி, பா.ரஞ்சித், எழுத்தாளர் கீதா
கல்வி உரிமை மாநாட்டில் ரோகினி, பா.ரஞ்சித், தீக்கதிர் குமரேசன்

அவர் பேசுகையில், ‘முன்னோர்கள் நமக்காகச் சேர்த்து வைத்த ஒரே சொத்து கல்வி மட்டுமே. வேத காலத்தில் இருந்தே கல்வி என்பது சமூகப் பிரச்னையாகவே இருக்கிறது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்விதான் நம்மை கேள்வி கேட்கத் தூண்டுகிறது . கேள்வி கேட்கத் தொடங்கினால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பதறுகின்றனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உயர்ந்தால் அது அதிகாரத்தில் இருப்பவர்ளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மாணவர்களிடம் கருத்து பகிர்வு
மாணவர்களிடம் கருத்து பகிர்வு

இட ஒதுக்கீடு, கல்வி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும்போது இதை பொது பிரச்னையாக அணுகவில்லை. இட ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உதவுகிறது என்று பலரும் நம்புவதுதான் இதற்கு காரணம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற வாசகத்தையே தூக்கி எறிய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை வராது. ஒற்றுமையில்தான் ஒற்றுமைவரும். பிரச்னைகள் அடிப்படையில் தான் நாம் ஒன்றாக இயங்குகிறோம். நமது மண்ணை பலர் ஆட்சி செய்திருந்தாலும் ஆங்கிலேயர்கள் தான் முதலில் அனைவருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்தார்கள்.

இதற்கு முன்பு ஆதியில் இருந்தே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டு வந்தது என்பதே உண்மை. கல்விக்கான பிரச்னைகளுக்கு நாம் பொது ஒற்றுமையை எதிர்பார்க்கிறோம். அதற்கு முன் சமூக வலை தளங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆதரவு திரட்ட வேண்டும். சாதி அடிப்படையில் தான் ஒருவனுக்கு மேல் என்ற எண்ணம் இருக்கும் வரை பொதுவான கல்வியை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மற்றவர்களை விட உயர்ந்த கல்வியைத்தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அதிகரிக்கும்.

மாணவர்களிடம் துண்டறிக்கையை வழங்கிய பா.ரஞ்சித்

இதன் காரணமாக தான் நடுத்தர மக்கள் இந்த கல்வி பிரச்னையை ஒரு பிரச்னையாகவே கருதுவது கிடையாது. பொது பிரச்னையாக பார்க்க இந்த சமூகம் கற்றுத்தரவில்லை. எந்த பிரச்னையானாலும் அது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான் அதிகம் பாதிக்கும். அவர்கள் மட்டுமே சலுகை அடிப்படையில் முன்னேறி வருவதாக நினைக்கும் நிலைப்பாடு உள்ளது’ என்று முடித்தார்.

Intro:கல்வி தான் கேள்வி கேட்க தூண்டுகிறது என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.Body:

திருச்சி:

கல்வி தான் கேள்வி கேட்க தூண்டுகிறது என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கல்வி உரிமை மாநாடு நேற்று நடந்தது.

இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், முன்னோர்கள் நமக்காகச் சேர்த்து வைத்த ஒரே சொத்து கல்வி மட்டுமே. வேத காலத்தில் இருந்தே கல்வி என்பது சமூகப் பிரச்னையாகவே இருக்கிறது. கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி தான் நம்மை கேள்வி கேட்கத் தூண்டுகிறது . கேள்வி கேட்கத் தொடங்கினால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பதறுகின்றனர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உயர்ந்தால் அது அதிகாரத்தில் இருப்பவர்ளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இட ஒதுக்கீடு, கல்வி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் போது இதை பொது பிரச்சனையாக அணுகவில்லை. இட ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே உதவுகிறது என்று பலரும் நம்புவது தான் இதற்கு காரணம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற வாசகத்தையே தூக்கி எறியவேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை வராது. ஒற்றுமையில்தான் ஒற்றுமைவரும். பிரச்னைகள் அடிப்படையில் தான் நாம் ஒன்றாக இயங்குகிறோம்.

நமது மண்ணை பலர் ஆட்சி செய்திருந்தாலும் ஆங்கிலேயர்கள் தான் முதலில் அனைவருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டை கொண்டு வந்தார்கள். இதற்கு முன்பு ஆதியில் இருந்தே கல்வி அனைவருக்கும் மறுக்கப்பட்டு வந்தது என்பதே உண்மை.

கல்விக்கான பிரச்னைகளுக்கு நாம் பொது ஒற்றுமையை எதிர்பார்க்கிறோம். அதற்கு முன் சமூக வலை தளங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆதரவு திரட்ட வேண்டும். சாதி அடிப்படையில் தான் ஒருவனுக்கு மேல் என்ற எண்ணம் இருக்கும் வரை பொதுவான கல்வியை யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். மற்றவர்களை விட உயர்ந்த கல்வியைத்தான் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கும்.

இதன் காரணமாக தான் நடுத்தர மக்கள் இந்த கல்வி பிரச்னையை ஒரு பிரச்னையாகவே கருதுவது கிடையாது. பொது பிரச்னையாக பார்க்க இந்த சமூகம் கற்றுத்தரவில்லை. எந்த பிரச்னையானும் அது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான் அதிகம் பாதிக்கும். அவர்கள் மட்டுமே சலுகை அடிப்படையில் முன்னேறி வருவதாக நினைக்கும் நிலைப்பாது உள்ளது என்றார். Conclusion:எந்த பிரச்னையானும் அது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான் அதிகம் பாதிக்கும் என்று திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.