கரோனா பரவல் காரணமாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. இதற்கிடையில் நேற்று (ஜூன் 20) கரோனா ஊரடங்கின் புதிய தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இன்றுமுதல் (ஜூன் 21) அதிகபட்சம் 100 பேருடன் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நபர்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் மட்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாத காலமாகப் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லாத காரணத்தினால், தமிழ்த் திரைப்படங்கள், தொடர்கள் ஹைதராபாத்தில் நடந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை