தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் ஃபெப்சி நிறுவனத்தின் தலைவர் ஆர். கே. செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஃபெப்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தொழிலாளர் பல்வேறு வேலை நிறுத்தங்களையும் இன்னல்களையும் சந்தித்துள்ளனர். ஆனால் தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் தொழிலாளர்களை வெகுவாக பாதித்துள்ளது.
சுமார் 25,000 உறுப்பினர்கள் கொண்ட சம்மேளனத்தில் 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். தற்போது இவர்களின் வாழ்க்கை நிலை பரிதாபமாக உள்ளது.
காலை லைட்மேன் சங்கத்தில் இருக்கும் உறுப்பினர் ஒருவர் வேலை நிறுத்தும் எப்போது முடியும் என்று கேட்டபோது, 15-20 நாள்கள் ஆகலாம் என்று கூறிய நிலையில் தன் குழந்தைகள் பசியால் சாவதைவிட தனக்கு கரோனா வந்தால் பரவாயில்லை தான் வேலைக்கு செல்லவேண்டும் எனக் கூறினார்.
-
சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் சாவாதை விட, எனக்கு #கொரோனா வந்தாலும் பரவாயில்லை... நான் வேலைக்கு போகணும் சார்!! #பெப்சி தொழிலாளியின் குமுறல் !! #FEFSI letter. pic.twitter.com/TK0bvZVYeD
— Johnson PRO (@johnsoncinepro) March 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் சாவாதை விட, எனக்கு #கொரோனா வந்தாலும் பரவாயில்லை... நான் வேலைக்கு போகணும் சார்!! #பெப்சி தொழிலாளியின் குமுறல் !! #FEFSI letter. pic.twitter.com/TK0bvZVYeD
— Johnson PRO (@johnsoncinepro) March 23, 2020சாப்பாடு இல்லாமல் என் குழந்தைகள் சாவாதை விட, எனக்கு #கொரோனா வந்தாலும் பரவாயில்லை... நான் வேலைக்கு போகணும் சார்!! #பெப்சி தொழிலாளியின் குமுறல் !! #FEFSI letter. pic.twitter.com/TK0bvZVYeD
— Johnson PRO (@johnsoncinepro) March 23, 2020
எனவே திரைத்துறையில் நல்ல நிலையில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குநர், தயாரிப்பாளர்கள் இதுபோன்று கவலைக்கிடமாக இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவ முன்வர வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் ஒரு உறுப்பினருக்கு ஒரு மூட்டை அரிசி கொடுத்தால் கூட 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா ஒரு மூட்டை அரிசி கொடுத்தால் இரண்டு கோடி ரூபாய் செலவாகும். எனவே கருணை உள்ளம் படைத்தவர்கள் முன்வந்து நிதி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க... மிரட்டும் கரோனா - தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்ட பாகுபலி பிரபாஸ்!