கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'தங்கல்' பாலிவுட் திரைப்படத்தில் அமீர் கானின் மகளாக அறிமுகமானவர் நடிகை ஃபாத்திமா சனா ஷைக். அப்படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடித்த இவர் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது ஃபாத்திமா சனா ஷைக் ’சுராஜ் பே மங்கல் பரி’ என்னும் படத்தில் நடித்துவருகிறார். இதனிடையே இத்திரைப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் பாரம்பரிய மராத்தி உடையில் ஃபாத்திமா சனா தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வியப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக ஃபாத்திமா சனா ஷைக் தன் உடல் மொழி தொடங்கி பெரும் மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளதாகவும், இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நகைச்சுவை கலந்த குடும்பக் கதை அம்சத்துடன் உருவாகும் இந்தத் திரைப்படம், இந்த வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ் சினிமா கண்ட காதல் கதைகள் - காதலர் தின சிறப்புத் தொகுப்பு!