வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை நகரின் பல இடங்களில் லேசான மழையே பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில் மாலை மீண்டும் சென்னையில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கடும் மழையினால் ஏற்பட்டு தேங்கியுள்ள வெள்ளநீரையும் பொருட்படுத்தாமல், நடிகை சாக்ஷி அகர்வால் டப்பிங் பணியில் ஈடுபட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தான் நடித்து வரும் 'தி நைட்' எனும் திரைப்படத்துக்காகவே சாக்ஷி அகர்வால் டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைக் கண்ட சாக்ஷி அகர்வாலின் ரசிகர்கள் பலரும், பாவம்யா செல்லத்துக்கு ஜல்ப்(சளி) பிடிச்சுக்க போகுது என வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் ரேஞ்சுக்கு ஏய்.. ஏய்... என கதறி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஜெய்பீம் விவகாரத்தில் தமிழ்நாடே சூர்யாவோடு...' - கே.சுப்பராயன் எம்.பி!