சென்னை: கரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் பல படங்கள் ஓடிடியில் வெளியாகின. இதில் முன்னணி நடிகரான சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விஜய்யின் மாஸ்டர் படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில், தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு தனுஷ் மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Fans put up a poster for the release of Dhanush movie in theaters](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-dhanush-poster-script-7205221_07022021110040_0702f_1612675840_1048.jpg)
இதனால் தனுஷ் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் ஜகமே தந்திரம் படத்தை திரையரங்குகளில் வெளியடக்கோரி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இப்படி போஸ்டர் அடிக்க சொன்னதே தனுஷ்தான் என்றும் கூறப்படுகிறது. தனது பேச்சை ஏற்காத தயாரிப்பாளருக்கு இந்த போஸ்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.