மதுரை: நடிகர் விஜய் 'ஆன் தி வே' என்று நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுக்கு பதில் சொல்வது போன்ற சுவரொட்டியை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர் நடிகர் விஜய் ரசிகர்கள்.
ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகைக்கு கொடுக்கின்ற அடிதான் அடுத்து எந்த நடிகருக்கும் அந்த சிந்தனை வருவதை தடுக்கும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக அளித்த பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து, மதுரையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வித்தியாசமான சுவரொட்டியை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த சுவரொட்டியில் நடிகர் விஜய் கமலுக்கும் ரஜினிக்கும் 'அரசியல் பணி தொடர வாழ்த்துக்கள் முன்னோடிகளே' என்று கூறுவதாகவும், அதற்கு ரஜினியும் கமலும் 'தம்பி நீங்க..?' என கேட்பதாகவும் அதற்கு விஜய் 'ஆன் தி வே' என்று பதில் அளிப்பதாகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
திரைப்பட நடிகர்களின் அரசியல் வருகையை எதிர்க்கும் சீமானுக்கு பதிலடி கொடுப்பது போன்று இந்த சுவரொட்டியை ஒட்டி விஜய் ரசிகர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் கடைசி நிமிடங்கள்...!