ETV Bharat / sitara

’நான் இறந்துவிட்டேனா...’ சித்தார்த் கொடுத்த ஷாக்கான ரியாக்‌ஷன்! - fans confuse tamil actor siddharth with sidharth shukla

நடிகர் சித்தார்த் தான் உயிரிழந்து விட்டதாக வெளியான செய்தி குறித்து பதில் அளித்துள்ளார்.

Siddharth
Siddharth
author img

By

Published : Sep 3, 2021, 1:44 PM IST

‘பாலிகா வது’ உள்ளிட்ட தொடர்களில் நடித்துப் பிரபலமானவர், சித்தார்த் சுக்லா. இவர் நேற்று (செப்.02) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் பலரும் சித்தார்த் சுக்லாவின் மறைவு குறித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் சித்தார்த் சுக்லாவிற்கு பதிவு வெளியிடுவதற்குப் பதிலாக, ட்விட்டரில் ஒருவர் தமிழ் நடிகர் சித்தார்த் புகைப்படத்தை வெளியிட்டு, RIP எனப் பதிவிட்டார்.

இதனைக் கண்ட சித்தார்த், "என் மீது இணைய வழியாக வெறுப்பும், வன்முறையும் காட்டப்படுகிறது. இதில் நாம் எந்த விதத்தில் குறையப் போகிறோம்" எனத் குறிப்பிட்டுள்ளார். சித்தார்த் படம் நடிப்பது மட்டுமின்றி அரசியலில் நிகழும் சூழல் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.