ETV Bharat / sitara

'வீரமே வாகை சூடும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு; குஷியில் ரசிகர்கள்!

author img

By

Published : Dec 1, 2021, 10:02 PM IST

விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படமானது வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

'வீரமே வாகை சூடும்' ரிலீஷ் தேதி அறிவிப்பு; குஷியில் ரசிகர்கள்!

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் உருவாகியுள்ளது. அதிகாரம் பலம் படைத்தவர்களை எதிர் கொள்ளும் ஒரு சாமானியனாக விஷால் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்ளிட்டப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்திலும், சில காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, இத்திரைப்படமானது வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'எதற்கும் துணிந்தவன்' டீஸர் ரிலீஸ் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.