தமிழ் சினிமாவில் முன்னூறு படங்களில் நடித்தவர் மூத்த நாடகக் கலைஞர் சேலம் சுந்தரம். இவர் நடிகர் சங்க முறைகேடுகளை தவிர்க்க பதினெட்டு முறை வழக்கு தொடுத்து முறையான தேர்தல் நடக்க நீதிமன்றம் மூலம் அடித்தளமிட்டுள்ளார். குன்றத்தூரில் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் இவர் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க ஆட்டோ மூலம் வாக்குச்சாவடிக்கு வந்தார்.
வாக்களித்துவிட்டு வரும்போது வெயில் காரணமாக திடீரென மயக்கமடைந்தார். இவர் மயங்கி விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் வாக்களித்துவிட்டு வந்த நடிகர் அபி சரவணன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவருக்கு முதலுதவி அளித்துவிட்டு, குன்றத்தூரில் சுந்தரம் வசிக்கும் முதியோர் இல்லத்தில் காரில் கொண்டு சேர்த்தார். மேலும், நலிந்த நடிகருக்கு நடிகர் அபி சரவணன் உதவிய சம்பவம் முகநூல் பக்கங்களில் வைரலாகியுள்ளது.
இதனையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகள் அபி சரவணன் செயலை பாராட்டினர். நடிகர் அபி சரவணன், நடிகை அதிதி மேனனை காதலித்து, திருமணம் செய்து ஏமாற்றியப் புகாரில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.