மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஃபஹத் ஃபாசில். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகிலும் தடம் பதித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், கும்பளங்கி நைட்ஸ், அதிரன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இதனிடையே ஃபஹத் ஃபாசில் அரவது மனைவி நஸ்ரியா இணைந்து நடிக்கும் டிரான்ஸ் திரைப்படம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஃபஹத் ஃபாசில் நடிக்கும் 'மாலிக்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டேக் ஆப் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனன், ஜோஜு ஜோஜ், திலீஷ் போத்தன், வினய் போர்ட், நிமிஷா ஷாஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அரசியலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படத்தை ஆண்டோ ஜோசப் நிறுவனம் தயாரிக்கிறது. சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷியாம் இசையமைக்கிறார்.
சுமார் 25 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப்படத்தை கோடை விடுமுறையையொட்டி, ஏப்ரல் 3ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
-
Here is #Malik First look..!!
— Fahadh Faasil (@Fahadh_Offl) January 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
#AntoJoseph #MaheshNarayanan#SanuJohn #SushinShyam pic.twitter.com/eAO0SeTb9q
">Here is #Malik First look..!!
— Fahadh Faasil (@Fahadh_Offl) January 18, 2020
#AntoJoseph #MaheshNarayanan#SanuJohn #SushinShyam pic.twitter.com/eAO0SeTb9qHere is #Malik First look..!!
— Fahadh Faasil (@Fahadh_Offl) January 18, 2020
#AntoJoseph #MaheshNarayanan#SanuJohn #SushinShyam pic.twitter.com/eAO0SeTb9q
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஃபஹத் ஃபாசில் சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் வயது முதிர்ந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.