கொச்சி: 8 நிமிட காட்சியால ஃபகத் பாசில் - நஸ்ரியா நடித்துள்ள டிரான்ஸ் படத்துக்கு சென்சார் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தப் படத்தை அன்வர் ரஷீத், தனது அன்வர் ரஷீத் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். படத்துக்கு வின்சென்ட் வடக்கன் திரைக்கதை எழுதியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் அன்வர் ரஷீத் மேற்கொண்டுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படம் மலையாளத் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நட்சத்திர தம்பதிகளான ஃபகத் பாசில் - நஸ்ரியா நஸிம் ஆகியோர் படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மோட்டிவேஷன் ஸ்பீக்கர் எனப்படும் பிறருக்கு ஊக்கமுட்டும் பேச்சாளர் கதாபாத்திரத்தில் ஃபகத் பாசில் நடித்துள்ளார். இதையடுத்து படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்சார் பிரச்னையில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெறும் 8 நிமிட காட்சிகள் குறிப்பிட்ட மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருப்பதாகவும், அதை நீக்குமாறும் சென்சார் அலுவலர்கள் கூறியுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட அந்தக் காட்சியை நீக்க விரும்பாத படத்தின் இயக்குநர் ரஷீத், மறுதணிக்கைகாக அனுப்பியுள்ளார்.
இதையடுத்து இந்தப் படத்தை மறுதணிக்கு குழு இன்று பார்க்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் படத்துக்கு சென்சார் அளித்த பின்பு திட்டமிட்டபடி படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.