ETV Bharat / sitara

நா. முத்துக்குமார் வசிச்ச வீட்டுல வசிச்சிருக்கேன் - மனம் திறக்கிறார் 'ஜீரக பிரியாணி' பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்

சின்ன வயசுல இருந்தே விளையாடுறது, ஊர் சுத்துறதுல ஆர்வம். எங்க வீட்டுல என்ன படிக்க வைக்கணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. அப்பறம் வேலைக்கு ஆகமாட்டான்னு விட்டுட்டாங்க.

பாடலாசிரியர் ஜெகன்
பாடலாசிரியர் ஜெகன்
author img

By

Published : Aug 27, 2021, 1:22 PM IST

Updated : Aug 27, 2021, 4:46 PM IST

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஒரு பாடல் வெளியாகி அது அவர்களது மனதுக்கு பிடித்துவிட்டால் அதனை கொண்டாடி தீர்ப்பர். அப்படி சமீபத்தில் வெளியான பாடல் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற திரைப்படத்தில் ’என் ஜீரக பிரியாணி நீ’ என்று தொடங்கும் பாடலை மு. ஜெகன் கவிராஜ் எழுதியிருக்கிறார். ஏற்கனவே நாகேஷ் திரையரங்கம் திரைப்படத்தில் இவர் பாடல் எழுதியிருந்தாலும் இந்தப் பாடல் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.

பூம்புகார், படித்தால் மட்டும் போதுமா போன்ற திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் மாயவநாதன் இவருக்கு உறவு வழி தாத்தா. ஜெகன் கவிராஜின் வரிகள் பயணம் குறித்து அவரிடம் பேசினோம். பாடலுக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வாழ்த்துகளுக்கு மத்தியில் உற்சாகத்தோடு பேச ஆரம்பித்தார் பாடலாசிரியர் ஜெகன்

ஜீரக பிரியாணி பாட்டு எழுதும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைச்சது

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் இயக்குனர் பிரபு ஜெயராம் எனது நண்பர். எங்கள் ரெண்டு பேருக்கும் நீண்ட நாளாவே நல்ல பழக்கம். நாங்கள் வாசிப்பு பழக்கம் கொண்டவங்க. அதனால, படிக்குறத தொடர்ந்து எங்களுக்குள்ள பரிமாறிக்கிட்டு அதப்பத்தி விவாதிப்போம்.

திடீர்னு ஒருநாள் இயக்குனர் பிரபு போன்ல அழைத்து படம் ஒன்னு ஓகே ஆகிடுச்சு. அதுல நீயும் ஒரு பாட்டு எழுதனும் அப்படினார். நானும் சரி, சிச்சுவேஷன், பாட்டோட ட்யூன் தாங்கனு சொன்னேன்.

ட்யூன அப்பறம் பாத்துக்கலாம். நீங்க சிச்சுவேஷனுக்கு வரிகள எழுதித்தாங்கனு சொன்னார். சரிங்கனு நான் எழுத ஆரம்பிச்சேன். இசையமைப்பாளர் குணா முழு சுதந்திரத்தையும் எனக்கு கொடுத்தார்

என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் போஸ்டர்

'ஜீரக பிரியாணி'... இந்த வார்த்தைல பல்லவியைத் தொடங்கணும்ங்ற ஐடியா ஏன்?

படத்தோட கதாநாயகன் இந்து பையன். அவனுக்கு இஸ்லாமியப் பெண் மேல காதல் ஏற்படுது. அவன் அவள நினைச்சு ஆசையோட பாடுற பாட்டுதான் இது. ஹீரோ ஹீரோயின் மேல லவ் வந்து பாட்டுப்பாடுறான் அப்படினு ரெகுலர் டெம்பளேட்ல எப்படி வித்தியாசமான பல்லவியை கொண்டுவரதுனு யோசிச்சேன்.

இயக்குநர் கதை சொல்றப்ப, படத்துல அந்த பொண்ணு பிரியாணி கடை வெச்சுருக்குனு சொன்னார். உடனே கதையிலிருந்தே எடுத்து, 'என் சீரக பிரியாணி, ஜீவனே நீதான்டி' அப்படினு பாட்டோட பல்லவியை வெச்சேன்.

இயக்குநருக்கும் அது ரொம்ப பிடிச்சுப் போச்சு, ட்யூன்க்கும் ஓகே ஆகிடுச்சு. பாட்டோட சூழல கேட்டதும் நான் என்னோட இஸ்லாமிய நண்பர்கள் பல பேர்ட்ட பேசுனேன். அவங்க வாழ்வியல் கேட்டறிஞ்சு அதுல சுவாரஸ்யமான அம்சங்கள பாட்டுல சேர்க்க முடியுமானு யோசிச்சேன்.

அவங்க பேசுனத வெச்சுதான், ”நீயே என் இறையே, என் இரண்டாம் பிறையே” அப்படினு வரிகள வெச்சேன். இஸ்லாமியர்களுக்கு இரண்டாம் பிறை ரொம்ப முக்கியமானது.

திரை பாடலாசிரியர் ஆகணும் என்ற ஆர்வம் எப்படி உருவானது?

பூம்புகார், படித்தால் மட்டும் போதுமா, இதயத்தில் நீ ஆகிய திரைப்படங்களில் பணிபுரிந்த பழம்பெரும் பாடலாசிரியர் மாயவநாதன் என்னோட உறவுவழி தாத்தா. நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க குடும்ப உறவினர்கள் அவரை பற்றி பெருமை பேசுறது வழக்கம்.

நாமளும் பெரிய கவிஞராக ஆனா நம்மையும் இப்படித்தானே பெருமையா பேசுவாங்க. அதனால நாமளும் திரை பாடலாசிரயர் ஆகணும்னு ஆசை வந்துச்சு. நான் ஐந்தாம் வகுப்புதான் வரைதான் படிச்சேன். எனுக்கு படிப்புலஆர்வம் இல்ல.

சின்ன வயசுல இருந்தே விளையாடுறது, ஊர் சுத்துறதுலா ஆர்வம். எங்க வீட்டுல என்ன படிக்க வைக்கணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. அப்பறம் வேலைக்கு ஆகமாட்டான்னு விட்டுட்டாங்க. பின்னாடி, படிக்காம விட்டுட்டோமேனு கவலை வர, இளங்கலை தமிழ் இலக்கியம் எழுதி முதல் வகுப்புல தேர்ச்சி பெற்றேன்.

பழம்பெரும் திரைப் பாடலாசிரியர் மாயவநாதன்

பாடல் துறைல உங்க முன்னோடிகள் பற்றி சொல்லுங்க

எங்க தாத்தாட்ட இருந்துதான் என்னோட எழுத்து பயணம் தொடங்கியதுனு சொல்லலாம். தமிழ் மொழியை இப்படி எல்லாம் கையாள முடியுமானு பிரமிக்க வைக்குற மாதிரி அவரோட வரிகள் இருக்கும்.

கவிஞர் வைரமுத்து அவரோட ’மௌனத்தின் சப்தங்கள்’ புத்தகத்துல எங்க தாத்தாவோட வரிகள குறிப்பிட்டு மாயவநாதனின் வரிகளில் மயங்கிப்போனேன் குறிப்பிட்டுள்ளார்.

எங்க தாத்தாவுக்கு அடுத்தபடியா கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார், தாமரை, யுகபாரதினு நீண்ட பட்டியல் இருக்கு.

மிகப் பெரிய விஷயங்களைக்கூட எளிமையான வரிகளில் மக்களுக்கு கொடுத்தவர் கண்ணதாசன் ஐயா. வாலி ஐயா மாதிரி வார்த்தைகளில் விளையட யாராலும் முடியாது. வைரமுத்து ஐயாவிடம் பயங்கரமான மொழி ஆளுமை இருக்கும்.

நா. முத்துக்குமார் அண்ணன் ரொம்ப ஸ்பெஷல். பதின் பருவத்தினரோட மனசுக்கு அப்படியே வார்த்தையா வடிவம் தந்தவர். அழமான கருத்த அழகியலோட வரிகளில் தருபவர் யுகபாரதி அண்ணன்.

ஒரு பாட்டுக்காக கடுமையான உழைப்பத் கொடுப்பவர் கவிஞர் தாமரை அக்கா. படத்தோட முழுக் கதையும் கேட்டு, கதாபாத்திரத்தின் குரலாவே நாம ஒலிக்கனும்னு ரொம்ப மெனக்கெடலோட எழுதுபவர் இப்படி அனைவரிடமும் தனித்துவமான அம்சத்த நான் பார்க்குறேன்.

இதுல நா. முத்துக்குமார் அண்ணனுக்கும் எனக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு. காஞ்சிபுரத்துல லால குட்டானு ஒரு தெரு இருக்கு. அங்க ஒரு ஐயரோட வீட்டுல முத்துக்குமார் கொஞ்ச நாள் வாடகைக்கு இருந்தாரு.

அந்த வீட்டுல நானும் கொஞ்ச நாள் வாடகைக்கு தங்கியிருக்கேன். "ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுனு தெரிஞ்சுக்கோ"... அப்டிங்ற முத்துக்குமாரோட வரிகள் பொறந்தது அந்த வீட்டிலத்தான்.

பாடலாசிரியர் ஜெகன்
பாடலாசிரியர் ஜெகன்
அடுத்த புராஜெக்ட்ஸ்?
இசைஞானி இளையராஜவோட முதல் ராஜாவான கார்த்திக் ராஜாவோட இசைல பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது இல்லாம ரெண்டு படங்களுக்கு வசனம் எழுத இருக்கேன். பாட்டு, எழுத்து இதுலயே தொடர்ந்து பயணிக்கிறது என்னோட விருப்பம், திட்டம் எல்லாம். சின்ன வயசுல இருந்தே, நாடகம், பாட்டு, கூத்து இப்படி கலைகள் மேலத்தான் எனக்கு ஆர்வம் இருந்துச்சு.
இதுல ஈடுபடுறதுக்கு சின்ன வயசுல எங்க அம்மா ஆரம்பிச்சு, இப்ப என் மனைவிவரைக்கும் உறுதுணையா நிக்குறாங்க. நான் நம்பிக்கையா செயல்படுறதுக்கு எங்க அப்பா எப்பவுமே முக்கிய தூணா இருந்துருக்காரு.

Last Updated : Aug 27, 2021, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.