ETV Bharat / sitara

30 ஆண்டுகளுக்கு பின் இணையும் எவர்கிரீன் ஜோடி...! - எவர்கிரீன் ஜோடி

கவின் - அபர்ணா தாஸ் நடிப்பில், உருவாகும் "Production No.4" படத்தில், எவர்கிரீன் ரீல் ஜோடியான K.பாக்யராஜ்-ஐஸ்வர்யா, 30 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கிறார்கள்.

Evergreen couple reunite after 30 years  Evergreen couple  Evergreen couple reunite  30 ஆண்டுகளுக்கு பின் இணையும் எவர்கிரீன் ஜோடி  எவர்கிரீன் ஜோடி  கவின் புதிய படம்
30 ஆண்டுகளுக்கு பின் இணையும் எவர்கிரீன் ஜோடி
author img

By

Published : Mar 24, 2022, 1:54 PM IST

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற கவின், தற்போது "Production No.4" என்ற படத்தில் நடித்து வருகிறார். கணேஷ் K.பாபு இயக்கும் இப்படத்தை ஒலிம்பியா மூவீஸ் S.அம்பேத் குமார் தயாரிக்கிறார். இப்படம் ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு, மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார். "முதல் நீ முடிவும் நீ" படப்புகழ் ஹரிஷ், "வாழ்" படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் நடிப்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் K.பாக்யராஜ் - நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில், கவினின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் "ராசுக்குட்டி" என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள், இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

இதையும் படிங்க: வலிமை படம் ரூ.200 கோடி வசூல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.