பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து மார்ச் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் இந்தத் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உண்டாகியுள்ளது.
மேலும், வெகுநாள்களுக்குப் பிறகு சூர்யா நடித்து திரையில் வெளிவரவிருக்கும் திரைப்படம் இந்தப்படம் என்பதால், தங்களின் நாயகனை நீண்ட காலத்திற்குப் பிறகு திரையில் காண சூர்யாவின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு இப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனையடுத்து இத்திரைப்படத்தின் டீசர் வருகிற 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாகப் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செய்தியால் மகிழ்ச்சியடைந்த சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனைப் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க:'காவல் துறையினரின் வாகனங்களிலேயே திமுக பணப்பட்டுவாடா...!'