சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இப்படத்தில் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அடுத்த மாதம் 18ஆம் தேதி படத்தை வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.