ETV Bharat / sitara

எண்ணித்துணிக: ஜெய்யின் புதிய திரைப்படம்! - எண்ணித்துணிக

அறிமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘எண்ணித்துணிக’.

Enniththuniga title reveal
Enniththuniga title reveal
author img

By

Published : Dec 12, 2019, 4:58 PM IST

இயக்குநர் வசந்த், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமா ரவி.கே. சந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் வெற்றிச்செல்வன். இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘எண்ணித்துணிக’. சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துவரும் இப்படத்தில் ஜெய், அதுல்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் பெயரை இயக்குநர் வெற்றிமாறன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

புதுமுக இயக்குநர் வெற்றிச்செல்வனுடன், வல்லினம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோஸப், ‘விக்ரம் வேதா’ புகழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், ‘96’ கார்த்திக் நேத்தா, ’சத்தம் போடாதே’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜே.பி தினேஷ் குமார் என முத்திரை பதித்த கலைஞர்கள் இதில் பணியாற்றுகின்றனர். முருகன் என்பவர் சண்டைப் பயிற்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படம் ஜெய்க்கு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enniththuniga title reveal
Enniththuniga title reveal

இத்திரைப்படம் குறித்து இயக்குநர் வெற்றிச்செல்வன் நம்மிடம் பேசுகையில், ’சமீபகாலமாக ஜெய் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. படப்பிடிப்பில் அவர் சிறப்பாக ஒத்துழைக்கிறார்’ என்றார்.

இதையும் படிங்க: நடத்துநர் முதல் நாடறிந்த நடிகன் வரை...ரஜினியின் 'தர்பார்'!

Intro:Body:

enni thuniga title

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.