ETV Bharat / sitara

யூ-டியூப்பில் சாதனை படைக்கும் 'எஞ்சாயி எஞ்சாமி' - dhee songs

சென்னை: 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் யூ-டியூப் தளத்தில் 44 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

Enjoy Enjaami
Enjoy Enjaami
author img

By

Published : Mar 21, 2021, 5:25 PM IST

கடந்த சில நாள்களாக இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள்வரை அனைவரும் முணுமுணுக்கும் ஒன்றுதான் ‘குக்கூ...குக்கூ’. அப்படி என்னதான், இந்த ‘குக்கூ...குக்கூ’ என்று பார்த்தால்தான் தெரிந்தது சமீபத்தில் வெளியான 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலின் நடுவில் வரும் வரி.

இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணனின் மகள் தீ, தெருக்குரல் அறிவு ஆகியோர் பாட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலர் ஃபுல்லாக இப்பாடலானது ரசிகர்களையும் பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வெளியான சில நாள்களிலேயே யூ-டியூப் தளத்தில் 44 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துவருகிறது.

ஏற்கனவே தமிழில் 'ஏ சண்டைக்காரா', 'மாரி 2' படத்தில் 'ரெளடி பேபி', 'காட்டுப் பயலே', 'ரகிட ரகிட' என பல வெற்றிப் பாடல்களை தீ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.