ஆனந்த் சங்கர் எழுதி இயக்கி, மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் 'எனிமி'. இதில் ஆர்யாவும், விஷாலும் நாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 'எனிமி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
-
#Enemy WORLDWIDE Grand Release on #AyudhaPooja pic.twitter.com/rvhmsnsqgJ
— Vishal (@VishalKOfficial) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Enemy WORLDWIDE Grand Release on #AyudhaPooja pic.twitter.com/rvhmsnsqgJ
— Vishal (@VishalKOfficial) September 6, 2021#Enemy WORLDWIDE Grand Release on #AyudhaPooja pic.twitter.com/rvhmsnsqgJ
— Vishal (@VishalKOfficial) September 6, 2021
இந்நிலையில் படத்தைச் சரியான நேரத்தில் வெளியிடுவதற்காகக் காத்திருந்த படக்குழுவினர், தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் படத்தை வெளியிடுகிறது.
இதனைப் படத்தின் நாயகன் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியுள்ளது.