ராப் பாடகர் எமினெம் என்பவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக அவர் வெளியிடும் பாடல்கள் உங்களை மோட்டிவேட் செய்யவில்லை என்றால், யாராலும் உங்களை மோட்டிவேட் செய்ய முடியாது என்ற அளவிற்கு, அவரின் பாடல் வரிகள் தோன்றும்.
இந்நிலையில், எமினெம் தற்போது, எரேஸ் மீ பாடகர் கிட் குட்டியுடன் இணைந்து 'The Adventures of Moon Man and Slim Shady' என்ற பாடலை உருவாக்கி யூ-டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
- View this post on Instagram
Hazmat suit rap @kidcudi #TheAdventuresOfMoonManAndSlimShady stream now - Link in bio
">
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை சம்பவத்தையும், மாஸ்க் அணியாமல் மக்கள் வெளியில் நடமாடுவது குறித்தும் ராப் மூலம் பாடி அசத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை வெளியான இப்பாடல் தற்போது வரை யூ-டியூப் தளத்தில் 7 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை செய்துள்ளது.