ETV Bharat / sitara

'ஒருநாள் நீங்கள் என்னை பாலிவுட்டில் பார்க்கலாம்'- டுவைன் ஜான்சன் - பாவிவுட்டில் நடிப்பதாக கூறும் டுவைன் ஜான்சன்

பல வித்தைகளை கைவசம் வைத்திருக்கும் ஹாலிவுட்டின் மெகா ஸ்டார் டுவைன் ஜான்சன், பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

Dwayne Johnson to act in bollywood
Dwayne Johnson to act in bollywood
author img

By

Published : Dec 9, 2019, 10:25 AM IST

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகராக வலம் வரும் வருண் தவானுக்கும் நடிகர் டுவைன் ஜான்சனுக்கும் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது.

'பேவாட்ச்' திரைப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி பிரியங்கா சோப்ராவுடன் ஏற்கனவே ஜான்சன் நடித்திருந்தார். இருந்தும் பாலிவுட்டில் அவர் நடிக்காதது, இந்திய ரசிகர்களிடையே சிறிது ஏமாற்றமாகவே பார்க்கப்பட்டது.

Dwayne Johnson to act in bollywood
டுவைன் ஜான்சன்

இதைத்தொடர்ந்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஜான்சன், நடிகர் வருண் தவானின் நட்பு குறித்தும், பாலிவுட்டில் நடிப்பது குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார். அப்போது வருண் தனது பெரிய ரசிகர் என்றும் அவருடன் சமூக வலைதளத்தில் முன்பே நட்பு ஏற்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும் வருண் இந்தியாவில் பெரிய நடிகர் என்றும் ஒருநாள் தன்னை ரசிகர்கள் பாலிவுட் ஆக்சன் திரைப்படத்தில் காணலாம் என்றும் குறிப்பிட்டார். ஏன்னென்றால் இந்தியாவில் தனக்கு ரசிகர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆக்சன் திரில்லரில் மிரட்ட வரும் 'ராங்கி' - டீஸர் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.