நடிகர் துல்கர் சல்மானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் ஃபிலிம்ஸ், எம். ஸ்டார் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் மீண்டும் துல்கர் உடன் இணையும் படம் 'குருப்'. ஷோபிதா துலிப்பாலா நாயகியாக நடித்திருக்கும் 'குருப்' படத்தில் இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, விஜயராகவன், பி.பாலசந்தரன், சுரபி லட்சுமி, சிவாஜித் பத்மநாபன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
சுகுமார் குருப்பின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ. 35 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவருகிறது. துல்கர் சல்மான் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் வாரம் திரைக்கு வர இருந்த இந்தப் படம் கரோனா தொற்று காரணமாக தள்ளிப் போய்விட்டது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் படக்குழுவினர் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் கோட், கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் துல்கர்.
![Dulquer starrer Group second look poster released](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-group-secondlookposter-script-7204954_24052020175119_2405f_1590322879_850.jpg)
கேரளா, அகமதாபாத், மும்பை, பெங்களூரு, மங்களூர், மைசூர் ஆகிய இடங்களிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் படமாக்கப்பட்ட இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கரோனாவிலிருந்து இயல்புநிலைக்கு திரும்பியதும் திரை அரங்கில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க... விக்ரம் பிரபு - துல்கர் சல்மான் இணையும் ஆக்ஷன் - த்ரில்லர்!