ETV Bharat / sitara

அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர்! - dulqer salaman releases nitham oru vaanam poster

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்' டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர்!

author img

By

Published : Feb 8, 2022, 3:41 PM IST

Updated : Feb 8, 2022, 9:06 PM IST

அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.

பாலிவுட்டில் மிகப்பெரும் நிறுவனமாக விளங்கும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom18 studios) நிறுவனமானது தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு 'நித்தம் ஒரு வானம்' என தமிழிலும், 'ஆகாஷம்' என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் தரமானப் படங்களை வழங்கி வரும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் (Rise East Entertainment) நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படம் நம் மனதின் நேர்மறை எண்ணங்கள், அன்பு, மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.

அசோக் செல்வனுக்கு நாயகியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

சென்னை, குலுமணாலி, சிக்கிம், கோவா உள்ளிட்டப் பல்வேறு அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை வெளியீடு பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பாலிவுட் குயின் ஹுமா குரேஷி

Last Updated : Feb 8, 2022, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.