ETV Bharat / sitara

பாபி சிம்ஹாவை நம்ப வேண்டாம்!

சென்னை: 'அக்னி தேவி' படம் தொடர்பாக பாபி சிம்ஹா தொடர்ந்த வழக்கு பொய்யானது என்றும், அவரை நம்ப வேண்டாம் என்றும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அக்னி தேவி
author img

By

Published : Mar 23, 2019, 3:11 PM IST

நடிகர் பாபி சிம்ஹா `அக்னி தேவ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜான்பால்ராஜ் - ஷார் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து இயக்கினர்.

இப்படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார். மேலும் மதுபாலா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று(மார்ச் 22) வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பு தணிக்கையில் 'அக்னி தேவி' என்று பெயர் மாற்றினர். பின்னர், இப்படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என பாபி சிம்ஹா தடை வாங்கியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 'அக்னி தேவி' படம் சம்பந்தமாக பாபி சிம்ஹா ஏற்கனவே கோவை கீழமை உரிமையில் நீதிமன்றத்திலும் முதன்மை சார்பு நீதிமன்றத்திலும் தவறான தகவல்களின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் தொடர்ந்துள்ளார். ஆனால் அவர் வழக்கு தொடர்ந்ததை வைத்து நீதிமன்றம் எந்த உத்தரவுகளும் தயாரிப்பாளருகளுக்கு எதிராக பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில் இயக்குநர் ஜான் பால் ராஜ் மீது பெயிலில் வர இயலாது அளவிற்கு புகார் கொடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. அவருக்கு முன்பிணை கிடைத்தவுடன் தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கும், ஊடகத்திற்கும் வெளியிடவிருக்கிறார்.

எனவே பாபி சிம்ஹாவின் பொய்யான பரப்புரையை யாரும் நம்ப வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.