ETV Bharat / sitara

முடிவுக்கு வந்தது 'டாக்டர்' பஞ்சாயத்து!

author img

By

Published : Sep 9, 2021, 7:59 PM IST

நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த 'டாக்டர்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு பிரச்சினை முடிவுக்கு தற்போது வந்துள்ளது.

டாக்டர், doctor tamil film
திரையரங்கில் டாக்டர் திரைப்படம்

சென்னை: 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'. பிரியா மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தனது எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மூலம் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

டாக்டர், doctor tamil film
திரையரங்கில் டாக்டர் திரைப்படம்

ஓடிடியா...? திரையரங்கா...?

'டாக்டர்' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா தொற்று பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி நீண்ட நாள்களாக தள்ளிப்போனது.

இதையடுத்து, 'டாக்டர்' படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட்து. ஆனால் ஓடிடியா இல்லை திரையரங்கா என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு குழப்பம் உருவானது. அதேபோல், திரையரங்கு உரிமையாளர்களும், 'டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்றே விரும்பினர்.

இந்நிலையில், டாக்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட தற்போது முடிவாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 'டாக்டர்' திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் வெளியிட்ட எண்ணித்துணிக டீசர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.