ETV Bharat / sitara

ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் விலை எவ்வளவு தெரியுமா? - cinima latest news

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரு நாட்களுக்கு முன்னர் தனது மகனுடன் சென்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னர் வெளியிட்ட புகைப்படத்தில், அவர் அணிந்திருந்த மாஸ்க் அனைவரது கவனத்தையும் பெற்றது. நெட்டிசன்களிடையே விவாதத்தை உண்டாக்கிய இந்த மாஸ்க்கின் விலை, சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியவந்துள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் மாதிரி.

author img

By

Published : Jun 9, 2021, 7:49 AM IST

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று முன்தினம் (ஜுன். 7) தனது மகனுடன் சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திய பின்னர் எடுத்த புகைப்படத்தை 'தடுப்பூசி போட்டாச்சு... நீங்க..?’ என்ற கேப்ஷனுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

அப்போது அவர் அணிந்திருந்த சற்றே வித்தியாசமான முகக்கவசம் குறித்த தகவல்களை நெட்டிசன்கள் ஆராயத் தொடங்கினர். அவரது ரசிகர்கள் பலரும் அந்த முகக்கவசம் எங்கு கிடைக்கும்? என்ன விலை? என்பது போன்ற கேள்விகளால் ரஹ்மானின் பதிவை நிரப்பத் தொடங்கினர். பலரும் அந்த மாஸ்க் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிடத் தொடங்கினர்.

ரஹ்மானின் ஹைடெக் முகக்கவசம்

ரஹ்மான் அணிந்திருந்த ஹைடெக் முகக்கவசம் எல்ஜி நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த முகக்கவசத்தின் இரு புறங்களிலும் காற்று சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்பான்கள் வெளியே இருந்து காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மாஸ்க்கைப் போல் இல்லாமல் இதனை எத்தனை மணிநேரங்கள் வேண்டுமானாலும் இடையூறு இன்றி இதனை அணிந்துகொள்ள முடியும். சுத்திகரிப்பான்கள் மட்டுமின்றி முகக்கவசத்தில் சென்சார் ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறது. இது மாஸ்க் அணிந்திருப்போரின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவை மாற்றிக் கொள்ளும்.

மேலும், இதில் யுவி-எல்இடி ஒளியும் பொருத்தப்பட்டுள்ளது. இது முகக்கவசம் அணிந்திருக்கும்போது கிருமிகள் நம்மை நெருங்காத வண்ணம் காத்துக்கொள்ளப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பங்கள் மூலம் முகக்கவசம் அணிந்திருப்போர், சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கவும், மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்படாத வகையிலும் சுவாசிக்க முடியும்.

ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் மாதிரி.
ஏ.ஆர். ரஹ்மான் அணிந்திருக்கும் மாஸ்க்கின் மாதிரி.

இதற்கிடையே, இந்த முகக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு தொழில்நுட்பமும் மாற்றத்தக்கவை. அதேபோல், மறுசுழற்சி செய்ய முடியும்.

இதில் இருக்கும் 820 எம்.ஏ.ஹெச் பேட்டரியை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில், அதிகபட்சம் 8 மணிநேரமும், குறைந்த பட்சம் 4 மணிநேரமும் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், முப்பது நாட்கள் இதனைப் பயன்படுத்திய பிறகு, அதில் உள்ள ஃபில்டர்களை மட்டும் மாற்ற வேண்டும். இவ்வளவு அம்சங்கள் கொண்ட ஹை-டெக் மாஸ்க்கின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 249 டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் அதன்விலை, சுமார் ரூ. 18 ஆயிரம் ஆகும்.

இதையும் படிங்க : சர்வதேச விருதுகளை வென்ற ஆர்யா திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.