சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படம் சூர்யாவின் 40ஆவது படமாகும். புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யா 5 கெட்டப்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று முதலமைச்சர் ரோல் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருகிறது. இதனை அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வதந்திகளை நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூர்யாவுடன் சத்யராஜ் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறையாகும்.