ஊட்டசத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் அட்சய பாத்திரம் அமைப்பின் விளம்பர தூதராக உள்ளார். இந்த அமைப்பிற்காக உணவுக் கூடம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கை மீதான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வெளியான செய்தியில், அட்சய பாத்திராம் அமைப்பு உலகப் புகழ்பெற்ற மதிய உணவுத் திட்டம் என திவ்யா குறிப்பிட்டார். இதற்கு ஏற்கனவே நகருக்கு வெளியே ஒரு உணவு தயாரிப்புக் கூடம் உள்ளதாகவும் நகருக்குள் ஒரு உணவு தயாரிப்புக் கூடம் இருந்தால் வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். மேலும் குழந்தைகளின் உடல் நலத்திற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்ககூடாது என்ற நோக்கில் அவர் இதற்கு அனுமதி அளித்ததுடன் இடமும் வழங்கி அடிக்கல் நாட்டி இருப்பதாகக் குறிப்பிட்ட திவ்யா, இதற்காக தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையும் படிங்க: 'ராதாரவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முடியாது' - பாடகி சின்மயி