ETV Bharat / sitara

ரசிகர்களின் பாராட்டு மழையில் "டிஸ்டண்ட்" பட டீசர்! - சுரேஷ் நல்லுசாமியின் டிஸ்டண்ட் பட டீசர்

ஜி.கே இயக்கத்தில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாக நடித்துள்ள டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Distant movie teaser
Distant movie teaser
author img

By

Published : Dec 22, 2020, 3:55 PM IST

Updated : Dec 22, 2020, 4:06 PM IST

சென்னை: முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'டிஸ்டண்ட்' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர். மேலும் இவரது 'காதலின் தீபம் ஒன்று' குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: உயிர் பிச்சை அளித்த கடவுளுக்கும் நன்றி- 'திருப்பாச்சி' நடிகர்

Last Updated : Dec 22, 2020, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.